திருச்சி பால்பண்ணை அருகே வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் கொள்ளை 8 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓட்டம்.
திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியை சேர்ந்தவர் லியாகத் அலி இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார் நேற்று மார்க்கெட்டிலிருந்து பழைய பால்பண்ணை ரவுண்டானா பகுதிக்கு சென்று பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல் இவரிடம் கத்திமுனையில் பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டது இதுகுறித்து லியாகத் அலி காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிந்து ராஜாமுகமது, ஸ்டீபன், ஜோன்ஸ், விகி பாஸ்கர், விஜயன், மேஷாக், கோபால், கலைச்செல்வன், ஆகிய 8 பேரை தேடி வருகிறார்.
2. திருச்சி மருந்துக்கடை உரிமையாளர் தூக்கு போட்டு சாவு .
திருச்சி பாலக்கரை மல்லிகை புரம் மரியம் நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் ராஜ்குமார் மருந்து கடை நடத்தி வருகிறார் இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்தார் இதற்கிடையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் மன அழுத்தத்தில் இருந்த ராஜ்குமார் மின்விசிறியில் மருந்து கடையில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3. ஸ்ரீரங்கம் நட்டுவாய்க்கால் பாலத்தில்
அடையாளம் தெரியாத பிணம் . ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை.

ஸ்ரீரங்கம் நட்டுவாய்க்கால் பாலத்தில் பொன்னுரங்கம் ரோடு பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பிணம் கிடப்பதாக திம்மராய சமுத்திரம் கிராம நிர்வாக அதிகாரி மணியரசன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊர் ? எப்படி இறந்தார் ? தற்கொலையா ? கொலையா ? என பல்வேறு வகையில் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4. திருச்சி தனியார் மருத்துவமனை நர்ஸ் மாயம்.
தஞ்சை மாவட்டம் பூண்டி குமுளி குடி பகுதியைச் சேர்ந்தவர் மூங்கிலடி இவரது மகள் சசிகலா (வயது 21) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் அவருக்கு ஒரு போன் வந்துள்ளது கடந்த 18ந் தேதி அலுவலகத்தில் தனது வேலையை ராஜினமா செய்துவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.