Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மும்பையில் பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் மரணம் .

மும்பையில் பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் மரணம் .

0

உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக இருந்தவர் ஆஸ்திரேலியாவை டீன் ஜோன்ஸ்,

ஐபிஎல் கிரிக்கெட் வர்ணனைகாக மும்பை வந்திருந்த டீன் ஜோன்ஸ் இன்று மாரடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி தனது 59வது வயதில் மரணம் அடைந்தார்.

அவரைப் பற்றி சில வரிகள்:

டீன் மெர்வின் ஜோன்ஸ். AM .Dean Mervyn Jones (பிறப்பு: மார்ச் 24, 1961)
(இறப்பு: செப்டம்பர் 24, 2020)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவார்.இவர் ஆத்திரேலிய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். வலதுகை சுழல்பந்து வீச்சாளரான இவர் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3631 ரன்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக 216 ரன்களை எடுத்துள்ளார். பந்துவீச்சில் 1 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
இவரது பந்துவீச்சு சராசரி 64.00 ஆகும்.
164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6068 ரன்களை 44.61 எனும் சராசரியில் எடுத்துள்ள இவரது அதிகபட்ச ரன் 165 எடுத்தது ஆகும்.

பந்துவீச்சில் 3 இழப்புகளைக் கைப்பற்றியுள்ளார். இவரது பந்துவீச்சு சராசரி 27.00 ஆகும். மேலும் இவர் 245 முதல் தரத் கிரிகெட் போட்டிகளில் விளையாடி 19188 ஓட்டங்களையும் , 285 பட்டியல் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாகவும் சிறந்த பீல்ட்ராகவும் இவர் அறியப்படுகிறார். 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களின் முற்பகுதியிலும் அவர் உலகின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்பட்டார். 2019 ஆம் ஆண்டில் ஜோன்ஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார்.

இவரது மறைவிற்கு முன்னாள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.