Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் போலீஸ் என கூறி சாலையோரம் உள்ள பெண் கூட்டு பலாத்காரம். இருவர் கைது.

திருச்சியில் போலீஸ் என கூறி சாலையோரம் உள்ள பெண் கூட்டு பலாத்காரம். இருவர் கைது.

0

திருச்சியில் சாலையோரம் தங்கியிருந்த பெண்ணை
கூட்டு பலாத்காரம் செய்த நபர்களில்
இருவர் கைது!

திருச்சியில் சாலையோரம் தங்கியிருந்த பெண்ணை
கூட்டு பலாத்காரம் செய்த நபர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி,
கோ-அபிஷேகபுரம் கோட்டம், புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை முன்பு உள்ள YMCA விளையாட்டு திடல் முன்பு ஆபிஸர்ஸ் காலனி, மதுரம் காம்ப்ளக்ஸ் கட்டிட வளாகம் முன்பு திருச்சி, காட்டூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுற்றிக்கொண்டு இருந்துள்ளார்.

17 செப்டம்பர் 2020 இரவு சுமார் 11-30 மணிக்கு மேல் ஒருவர் போலீஸ் என்று கூறி இளம்பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று உள்ளார். 18 ஆம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு ஆட்டோவில் 4 நபர்கள் அலங்கோலமான நிலையில் உதட்டில் காயத்துடன் ஆடையில் ரத்தத்துடன் வந்த நிலையில்
ஸ்ரீ அம்மன் மெஸ் அருகில் இறக்கி விட்டு விட்டனர்.
இறக்கி விடப்பட்ட பெண் கட்டிட வளாகம் முன்பு உள்ள படியில் அமர்ந்த இடம் முழுவதும் ரத்தம் இருந்துள்ளது.

கார்த்திக் என்பவர் இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர்க்கும், பாய்ஸ் ஆம்புலன்ஸ் உரிமையாளர் முஹம்மது
இலியாஸ்க்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்த இலியாஸ் அரசு உதவி எண் போன் தொடர்பு கொள்ளாமல் போக என் திருச்சி டாட்காம் மின்னிதழ் விஜயகுமார்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் திருச்சி,புத்தூர் YMCA விளையாட்டு மைதானம் முன்பு சென்று பார்த்த விஜயகுமார் வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ரா உள்ளிட்டோர்க்கு தகவல் அளிக்க, உடனடியாக காவல் உதவி எண் 100க்கு போன் மூலம் புகாரை வழக்கறிஞர்கள் பதிவு செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் இளம் பெண்ணை பாதுகாக்கும் வகையில்
வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ரா,
விஜயகுமார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முகமது இலியாஸ், மணிகண்டன், செய்தியாளர் இப்ராஹிம் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டெடுத்தனர்.

புகாரின் அடிப்படையில்
கோட்டை சரக துணை ஆணையர் ரவி ஆபிரகாம், உறையூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயகுமார், அனைத்து மகளிர் காவல்நிலைய பெண் காவல் ஆய்வாளர் ஆனந்தி வேதவல்லி ,உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சைக்காக மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் காவலர்கள் சேர்த்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் பலர் என்னை கற்பழித்து விட்டார்கள் என தெரிவித்ததை தொடர்ந்து வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி,சித்ரா விஜயகுமார் உள்ளிட்டோர் தமிழக முதல்வர்,
திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு
சாலையில் சுற்றித்திரிந்த இளம்பெண்ணை
கூட்டு பலாத்காரம் செய்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும்
ஆதரவற்று இருப்பிடமின்றி சாலையோரம் தங்கியிருக்கக் கூடிய பெண்கள் வன்கொடுமைகளுக்கு ஆளாகாமல் பாதுகாப்புடன் பராமரித்து அவர்களின் நலன் காக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இச்செய்தியை அறிந்த அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் காவல் ஆணையர்க்கு நடவடிக்கை எடுக்கக் கோரி வாட்ஸ்அப் மூலம் மனு அனுப்பியது.
இந்நிலையில் விசாரணை செய்து வந்த ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி , அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயா உள்ளிட்ட காவலர்கள் தொடர் விசாரணையில்
முஸ்தபா, சிவா ஆகிய இரண்டு நபர்களை
376d(21)பிரிவில் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.