உலக பிரபலம் வாய்ந்த நாசா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி கொண்டு வருகிறது.
சமீபத்தில் இந்த நாசா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விண்வெளியில் இருந்து இமய மலையினை புகைப்படம் எடுத்து பகிர்ந்திருந்தது. அதிலும் நாசா வெளியிட்ட புகைப்படத்தில் ஒளியில் மிளிரும் நகரங்களாக புது டெல்லி, லாகூர் போன்றவையும் இடம் பெற்றிருந்தது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
அந்த புகைப்படத்தில், இமயத்தின் மீது பனிப்போர்வை போற்றி இருப்பது போன்று மிகவும் அழகாக காட்சி அளித்தது. பின்பு இந்த புகைப்படம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .