
மருமகளின் பணத்தை திருடிய மாமியார்.திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்.
திருச்சி
ஸ்ரீரங்கம் நெல்சன்
சாலை நரியன் தெருவில் வசித்து வருபவர் சித்ரா.
இவர் தனது தந்தை வீட்டின் மாடியில் வசித்து வருகிறார். கீழ் வீட்டில் இவருடன் அவருடைய அத்தை வசித்து வருகிறார். வழக்கமாக சித்ரா மற்றும் அவரது தந்தை இருவரும் வராண்டாவில் தூங்குவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி சித்ரா வீட்டின் கதவை பூட்டிவிட்டு வீட்டு சாவியை சித்ராவின் அத்தை உறங்கிக் கொண்டிருந்த தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு வெளியே உள்ள வராண்டாவில் உறங்க சென்றுள்ளார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 28 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது தெரியவந்தது ..
இதை அடுத்து அவர் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது அவருடைய அத்தை காஞ்சனா (வயது 44) வீட்டின் கதவை திறந்து பீரோவில் இருந்த பணத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.அதை எடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து 28 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

