திருச்சியில் டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில பொதுச் செயலாளர் முத்துப்பாண்டி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில தலைவர் அறிவழகன், பொருளாளர் தனசேகரன், துணைப் பொதுச் செயலாளர் சிவக்குமார், மாநில நிர்வாகிகள் புஷ்பகாந்தன் ஆறுமுகம், தேவ அருள்ராஜ், மேகநாதன், பெரியசாமி. ஜெகநாதன்,கள்ளிகுடி பாஸ்கரன். திருமா பாண்டி. மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ரத்தினம்,பாஸ்கர், காளியப்பன். மாரிமுத்து உட்பட பலர் முன்னிலை வகுத்தனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற குழு தலைவருமான சிந்தனை செல்வன் மாநில அமைப்பு செயலாளர் பேரழிவாளன் திருச்சி உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
தொடர்ந்து கூட்டத்தில்
திருமாவளவனின் 60வது அகவை மணிவிழாவாக இந்தியா முழுவதும் கொண்டாடி வரும் வேளையில் டாஸ்மாக் விடுதலை தொழிலாளர் முன்னணி சார்பாக மணிவிழா மாநாடு நடத்தப்படும்,
மாநாட்டில் கட்சியின் வளர்ச்சிக்காக மாவட்டம் தோறும் ஒரு சவரன் என்ற அடிப்படையில் 30 சவரன் பொற்காசுகள் வழங்குவது, டாஸ்மாக் மானிய தொழிலாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் அல்லது துறை சார்ந்த அமைச்சர்களை அழைப்பது, டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிறைந்த உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நமது ஒட்டுமொத்த குரலாக தமிழக சட்டமன்றத்தில் உரிமைகள் நிறைவேற்றித் தருமாறு பொதுச் செயலாளர் சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன் அவர்களை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மான நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலைச் சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளரும் காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனை செல்வன்
19 ஆண்டுகளுக்கு மேலாக டாஸ்மாக் துவங்கப்பட்டதிலிருந்து இன்று வரை டாஸ்மாக் ஊழியர்கள் ஒரு தொகுப்பு ஊதிய பணியாளர்களாகவே நடத்தப்பட்டு வருகிறார்கள்.
40 -45 வயது கடந்த நிலையில் பணி நிரந்தரம் கிடைக்கவில்லை ஒழுங்குபடுத்தப்பட்ட ஊதிய விகிதம் தரப்படவில்லை. எனவே, அனைவருடைய பணி நிரந்தர படுத்தி அரசு பணியாக அங்கீகரிக்கப்பட வேண்டும், காலமுறை ஊதியம் செய்யப்பட்டு ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கப்பட வேண்டும், நீண்ட காலமாக முன் வைத்திருக்க கோரிக்கையை தமிழக அரசு பணிவுடன் பரிசிலீக்க வேண்டும், இதேபோல் தொழிலாளர்கள் பணிக்காலத்தில் இறந்தால் இழப்பீடு, பணி ஓய்வுக்கு பிறகு
கிடைக்க வேண்டிய பண பயன்கள் வழங்க வேண்டும், இரவு 10 மணி வரை கடை திறப்பு நீடிக்கப்பட்டு இருக்கிறது. பத்து மணிக்கு பிறகு கணக்குகளை முடித்துவிட்டு அவர்கள் தொலைதூரம் இருக்கக்கூடிய கிராமங்களுக்கு, நகரத்துக்கு நோக்கி வரவேண்டிய சூழ்நிலை இருக்கிறார்கள்.
இரவு 11 அல்லது 12 மணிக்கு மேல் தான் அவர்கள் அங்கிருந்து வரக்கூடிய சூழ்நிலையில்
பல விதமான சமூக விரோதிகளால் நேரக்கூடிய ஆபத்துக்களை அவர்கள் எதிர்க்க வேண்டி உள்ளது. எனவே இரண்டு மணி நேரம் குறைக்க வேண்டும் இரவு
8 மணிக்குள்ளாக டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும், ஒழுங்கு நடவடிக்கைகள் சடங்குத்தனமாக நடத்தப்பட்டு வருகிறது அந்த ஒழுங்கு நடவடிக்கைகளை வேண்டியவர் வேண்டாதார் என தரம் பிரித்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் அவலம். சாதிஅளவு கோல்கள் பின்பற்றப்படுகின்றன குறிப்பாக பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்கள் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு பலியாகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. விற்பனை அதிகமாக இருக்கக்கூடிய கடைகளில் இவர்கள் பணியமர்த்தம் செய்யப்படுவதில்லை என்ற பாரபட்சமான நிர்வாக அணுகுமுறையும் சுட்டிக்காட்டு பட்டுள்ளது. எனவே நிர்வாகத்தில் யாதொரு பாரபட்சம் இல்லாமல் சமூக நீதிக்கான பார்வையோடு நடைபெறுவதை அமைச்சர் பெருமக்களும் முதல்வரும் உறுதிப்படுத்த வேண்டும்.
மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற கொள்கை விசிகாவில் உள்ளது. இது குறித்து முதல்வரிடத்தில் இடத்தில் முறையிடப்படுமா என்ற கேள்விக்கு
முழு மதுவிலக்கு தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இலக்கு. ஆல்கஹால் மட்டும் அல்ல இந்த தமிழ்நாட்டில் அச்சுறுத்தும் கஞ்சா உள்ளிட்ட கொடூரமான போதை பொருட்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு முதல்வர் எடுத்து இருக்கிற முயற்சிகளை விடுதலை சிறுத்தைகள் பாராட்டுகிறது.
அதே வேளையில் முதல்வரின் என்ன ஓட்டத்திற்கு இணைந்த வகையில் காவல் அதிகாரிகளும், வருவாய் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
டாஸ்மாக்கை அரசு எடுத்து நடத்தும் போது இதில் இருக்கும் ஊழியர்கள் நலன்களை அரசு பாதுகாக்க வேண்டும். இதனால் அரசிற்கு பெருத்த லாபம் கிடைக்கும். அதில் குறைந்த பட்சம் தொழிலாளருக்கு பகிர்ந்து கொடுக்க அரசு முன் வர வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்திருந்தாலும் ஒரு பிரிவினர் அதற்கு அனுமதியை கொடுக்கக் கூடாது என்று கூறி வருகின்றனர் என்ற கேள்விக்கு
ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட முற்றும் முரணான மாறுபட்ட கருத்துக் கொண்டிருக்கிற ஜனநாயக உரிமைகளையும் நலன்களையும் பறிப்பது நோக்கம் அல்ல அவர்களின் கருத்துக்களை பரப்புவதற்காக சட்டபூர்வ நடைமுறைகளை பின்பற்றி அவர்கள் ஊர்வலங்களை நடத்துவார்கள் என்றால் அதற்கான திட்டத்தை உருவாக்குவார்கள் என்றால் அதனை தடுப்பதில் அதற்கு விடுதலை சிறுத்தை கட்சியில் உடன்பாடு இல்லை. ஆனால் தமிழகத்தில் திடீர் பதற்றத்தை உருவாக்கி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து தமிழக அரசுக்கு அவபேரையும் நெருக்கடியும் உருவாக்குவதற்கு ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார கும்பல்கள் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனுடைய விளைவு தான் நிதி அமைச்சருடைய கார் மீது எதிரே நின்று செருப்பு வீசுகிற அளவுக்கு அற்பத்தனமான மிக கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊது குழலாக நமது தமிழக கவர்னர் தொடர்ந்து செயலாற்று வருகிறார்கள் என தெரிவித்தார்.