திருச்சியில் செல்போன் டவரில் பொருட்களை திருடியவர் கைது.
திருச்சி காஜாமலை ஜே.கே நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கோட்டை போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார் .அந்த புகாரில், திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவில் உள்ள செல்போன் கோபுரத்தில் பொருட்கள் திருட்டு போயிருந்தது. திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா வழக்குப்பதிந்து பொருட்களை திருடியதாக கந்தசாமி என்ற முதியவரை கைது செய்தார்.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.