

திருச்சி வயலூர் மெயின் ரோடு சண்முகா நகர் பஸ் நிறுத்தம் கற்குடிநாதர் வணிகவளாகத்தில் குமரன்ஸ் பேக்கரி ஸ்வீட்ஸ் அண்டு ஸ்னாக்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேக்கரியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பேரமைப்பின் திருச்சி மண்டல தலைவர் எம். தமிழ்செல்வம்,
திருச்சி மாவட்ட தலைவர் வி. ஸ்ரீதர்,மாவட்ட துணை தலைவர் மயில் வாகனம், வயலூர் சாலை புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் நல சங்க தலைவர் எஸ்.வி. முருகேசன், செயலாளர் ஆர்.காளிமுத்து, பொருளாளர் கரிகாலன் ரவி,திருச்சி மாமன்ற உறுப்பினர் கே.எஸ். நாகராஜ், வி.அன்பு செழியன், நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் எஸ். ராஜன், பிரேம் குமார், அதன் பொருளாளர் ஜெயம் மோகன், செயலாளர் மேகநாதன், ஒருங்கிணைப்பாளர் ஆர்.டி.வி.மணி, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் எம்.ராஜேந்திர குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை
குமரன்ஸ் பேக்கரியின் உரிமையாளர் எல். கண்ணன் மற்றும் எல் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதவிதமான ஸ்வீட்ஸ் மற்றும் கார வகைகள், தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதாக குமரன்ஸ் பேக்கரி அண்ட் ஸ்வீட்ஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

