மாணவர்களின் நலன் கருதி பள்ளி கட்டிடங்களை முறையாக தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல் .
மாணவர்களின் நலன் கருதி பள்ளி கட்டிடங்களை முறையாக தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர்கள் இரண்டு பேர் படு காயம் அடைந்தனர் என்கிற செய்தி மிகுந்த வேதனை தருகிறது . மேலும் இச்சம்பத்திற்கு பெரியார் அரசு பள்ளியை நிர்வாகம் செய்து வருவோரின் மேத்தன போக்கு தான் இதற்கு காரணம் என்பதை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி குற்ற சாட்டு வைக்கிறது.
ஏனென்றால் பெரியார் அரசு பள்ளியின் நிர்வாகம் முறையாக கட்டிடங்களை பராமரித்திருந்தால் இது போன்ற கொர சம்பவம் நடை பெறமால் இருந்து இருக்கும். ஆகவே இப்பள்ளி நிர்வாகத்தினர் மீது எந்த வித பாரம் பட்சம் பாராமல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
மேற் கூரை இடிந்து விழுந்ததில் படு காயம் அடைந்த பள்ளி மாணவர்களுக்கு தகுந்த நிவாரணங்கள் மற்றும் முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் . மேலும் இப்பள்ளியின் கட்டிடங்களை பழுது பார்த்து சரி செய்த பின்னே கல்வி பயில மாணவர்களை அனுமதிக்க பட வேண்டும். அது வரையிலும் பள்ளி மாணவர்கள் கல்வி பயில மாற்று ஏற்பாடுகள் செய்து தர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
எனவே – பள்ளி மாணவர்களின் நலன் கருதி இனி வரும் காலங்களில் இது போன்ற கொர சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டிடங்களை முறையாக பராமரிக்க படுகிறதா – பள்ளி மாணவர்கள் கல்வி பயில தரமான கட்டிடங்களா என்று முறையாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும் பள்ளிக்கூடங்களில் படிக்கக்கூடிய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம் இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.