Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வக்பு வாரிய நடவடிக்கையை நிறுத்தி வைக்க பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் கோரிக்கை.

0

'- Advertisement -

 

நூறு ஆண்டுகளுக்கும்
மேலாக, தனியார் மற்றும் இந்துக்கோயில்களின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை வக்ஃபு வாரிய சொத்துகளாக
அறிவிப்பது தவறு. அவற்றின் உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும் என பாஜக
சார்பில் ஆட்சியரிடம் கோரிக்கை.

இதுகுறித்து, திருச்சி மாநகர் மாவட்ட
பாஜக தலைவர் எஸ். ராஜசேகரன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட ஆட்சியர்
மா. பிரதீப்குமாரை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:

திருச்சியில் இந்துக்களுக்கு சொந்தமான பல்வேறு சொத்துகள் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது என்றும், அவற்றின் பெயரில் பத்திரங்கள் பதிவு செய்யக்
கூடாது என்றும் சார்-பதிவாளர்
அலுவலகங்களுக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி
வக்ஃபு வாரியத்தின் முதுநிலை செயல்
அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தசொத்துகள் வக்ஃபு வாரியத்துக்கு
சொந்தமானது என்பதற்கான எந்த ஒரு
ஆவணங்களையும் அனுப்பாமல்,
பெயரளவில் மட்டும் வாரியத்துக்கு சொந்தமானது என்று கூறியுள்ளனர்.

இச்சொத்துகளை இந்துக்கள் பரம்பரை பரம்பரையாக, சுமார் நூறாண்டுகளுக்கும் மேலாக
அனுபவித்து வருகின்றனர்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சொத்துகளில் பல
இந்து கோயில்கள் சொத்துகளும் அடங்கியுள்ளன.

இது முற்றிலும் சட்ட விதி மீறலாகும். எனவே, தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் கடிதத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, உண்மையிலேயே அந்த சொத்துகள் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானதா என்பதை உறுதி செய்ய
வேண்டும்.

இதுதொடர்பாக அனைத்து விவரங்களையும், ஆவணங்களையும் பரிசீலனை செய்து முடிவெடுக்கும் வரை, இக்கடிதத்தின் பெயரிலான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது மாவட்ட துணைத் தலைவர் ஜெயகர்ணா.சந்துரு, மணிமொழி, மாவட்ட செயலாளர் நாகேந்திரன், சங்கீதா, மணிமேகலை, ஜெயந்தி.பார்த்திபன்,உறையூர் மண்டல் தலைவர் ராஜேஷ்.அரசு தொடர்பு மாவட்ட தலைவர் லெனின் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.