திருச்சியில் டாஸ்மாக் கடைகளை மூடிய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் நன்றி.

திருச்சி உறையூரில் மூன்று டாஸ்மாக் கடைகளில் உத்தரவிட்ட கலெக்டருக்கு நன்றி தெரிவித்து திருச்சி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் அறிக்கை.
திருச்சி உறையூர் கடைவீதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து திருச்சி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் கூறியதாவது:
திருச்சி உறையூர் கடை வீதியில் பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்பும்,அச்சத்தையும் தந்து வந்த மூன்று டாஸ்மாக் கடைகளையும் (சில தினங்களுக்கு முன்பு கொலை நடந்த கடையும் சேர்த்து) திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பாஜக மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக மூட நடவடிக்கை எடுத்த திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனைவரின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் மக்களின் பாதிப்புகளை உணர்ந்து பூரண மதுவிலக்கை தமிழக அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்
தமிழக அரசு தற்போது போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொண்டு வருகிறது, இந்த நேரத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

