
திருச்சி ராஜா காலனியில் அமைந்துள்ள டைம் கிட்ஸ்
மழலையர் பள்ளியில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு இன்று திருச்சி ராஜா காலனியில் அமைந்துள்ள டைம் கிட்ஸ் மழலையர் பள்ளியில் உள்ள மாணவர்கள் புல்லாங்குழலுடன் கிருஷ்ணனாகவும் மாணவிகள் கோதைகளாகவும் வேடம் அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனர்.
அங்கு அவர்கள் வெண்ணை பானையை உடைக்கும் நிகழ்ச்சியியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை டைம் கிட்ஸ் பள்ளி தாளாளர் பிரியா மற்றும் ஆசிரியைகள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

