

திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கப்படவுள்ளன.
இதில் 10 முதல் 12 ஆம் வகுப்புகள் ஐ.டி.ஐ, டிப்ளமோ, மற்றும் பட்டப்படிப்புகள் முடித்த 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்,சுயவிபரக் குறிப்பு மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளலாம்.
இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

