Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காவிரி ஆற்றில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் பேட்டி

0

'- Advertisement -

 

காவிரி ஆற்றில் பொதுமக்கள் இறங்க வேண்டாம்.

காவிரி கொள்ளிடத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி:

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை நுண்கதிரியல் பிரிவில், மேம்பட்ட மார்பக ஊடுகதிர் படச் சோதனை இயந்திரம், டிஜிட்டல் ஃப்ளுரோஸ்கோபி இயந்திரம், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி ,டாப்ளர் அல்ட்ரா சவுண்ட் இயந்திரம் என ரூபாய் 3.70 கோடி மதிப்பிலான நான்கு அதிநவீன கதிரியக்க இயந்திரங்களை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.
நேரு அவர்கள் இன்று மக்கள் பயன்பாட்டிற்கான மருத்துவ சேவைக்கு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு‌.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் .ஆர். வைத்தியநாதன்,,அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர்.த.நேரு , சட்டமன்ற உறுப்பினர்கள் .அ.சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், தியாகராஜன், பழனியாண்டி, அப்துல் சமது, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். அருண் ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருநிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை 1 மி.மீ அளவிலேயே கண்டறியும் நவீன கருவி இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

காவேரியில் அதிக அளவு நீர்வரத்து இருப்பதால் காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆற்றில் பொதுமக்கள் இறங்க கூடாது.

மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அனைத்து துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.

முன்னதாக திருச்சி உறையூர் கல்லாங்காடு, உய்ய கொண்டான் திருமலை லாவண்யா கார்டன் பகுதி,திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் ஆகிய இடங்களில் புதிய நியாய விலைக் கடைகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.