பிரபல ஹாலிவுட் நடிகர் டாமி திடீர் மரணம். ரசிகர்கள் அதிர்ச்சி.
பிரபல ஹாலிவுட் நடிகர் டாமி திடீர் மரணம். ரசிகர்கள் அதிர்ச்சி.
பிரபல WWE வீரரும் ஹாலிவுட் நடிகருமான டாமி டைனி லிஸ்டர் காலமானார்.
62 வயதான அவர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவர் 1985ஆம் ஆண்டுகளில் WEE சண்டையில் பிரபலமானவராக இருந்தார்.
பின்னர் 1989ஆம் ஆண்டு நடந்த சம்மர்ஸ்லாம் போட்டியில் ஹல்க் ஹோகனை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் அதில் அவர் தோல்வி அடைந்தார். இதனையடுத்து WWE சண்டையில் இருந்து ஓய்வுபெற்றுக்கொண்ட அவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இந்தி படங்களிலும் நடித்தார்.
1995ஆம் ஆண்டு வெளியான Friday, Next Friday உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் டாமி பிரபலமானார்.
இதனால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.
மேலும் Confidence, The Dark Knight உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அதேபோல் பல டிவி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் டாமியின் திடீர் மறைவு அவரது ரசிர்களையும், திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.