ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு. பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு. பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா சொர்க்கவாசல் திறக்கும் போது, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதேசி விழா வருகிற 14-ஆம் தேதி தொடங்கி 04/01/2021 அன்று முடிய நடைபெற உள்ளது.
வருகின்ற 15/12/2020 பகல்பத்து முதல் திருநாள் தொடங்கப்பட்டு 24/12/2020 அன்று ஸ்ரீ நம்பெருமாள் மோகினி அலங்காரம் நடைபெற உள்ளது.
25/12/2020 அன்று முக்கிய நிகழ்வான பரமபத வாசல் ( சொர்க்க வாசல்) திறப்பு நிகழ்வு காலை 4.45 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பின் போது, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வரும் 24ஆம் தேதி மாலை முதல், 25ஆம் தேதி காலை 8 மணிவரை ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்காது.
ஆன்லைன் டிக்கெட் பெற்ற பக்தர்கள் காலை 8 மணிக்கு பிறகு தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள் என அறிவித்துள்ளது.