விஜய் முகத்தை தனது உடலில்
டாட்டுவாக வரைந்த ரசிகர்.
நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது முகத்தை, சுமார் 16 மணிநேரம் காத்திருந்து தனது உடலில் டாட்டூவாக வரைந்து கொண்ட சேலம் ரசிகர்.
திரைப்பட நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிற ஜூன் 22 ஆம் தேதி ரசிகர்களால் கொண்டாடப்பட உள்ளது. விஜய்யின் பிறந்தநாளில் கேக் வெட்டிக் கொண்டாடுவதும், நலத்திட்டங்கள் வழங்கியும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபடத் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த விஜய்யின் தீவிர ரசிகரான ராஜ்பாரதி என்பவர் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார், இவர் விஜய் நடித்த திரைப்படங்களை தனது 4 வயதில் பார்க்கத் தொடங்கினார். அன்று முதல் விஜய்யின் புகைப்படங்களை முதல் நாளில் பார்ப்பதும், பிறந்தநாளின் போது நண்பர்களுடன் கேக்வெட்டி கொண்டாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் தனது உள்ளம் கவர்ந்த நடிகர் விஜய் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட முடிவெடுத்தார்.
அந்த வகையில் விஜயின் படத்தை தனது உடலில் ஓவியமாக (டாட்டூவாக) வரைந்து, விஜய்யின் மனதில் இடம் பிடிக்கும் வகையில் செயல்வடிவம் மேற்கொண்டார்.
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி அருகில் உள்ள பிரபல Why Why டாட்டூஸ் டிசைனர் கோடீஸ்வரன் கைவண்ணத்தில் தனது முதுகில் நடிகர் விஜய்யின் முகத்தினை மிகப்பெரிய அளவில் பச்சை குத்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
இந்த டாட்டூ வரைவதற்கு சுமார் 16மணிநேரம் எடுத்துக்கொண்டதாக டாட்டு டிசைனர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த டாட்டூவை வரைந்துக்கொண்டதன் மூலம் நிச்சயம் விஜய்யை நேரில் சந்திக்கும் நீண்டநாள் கனவும் நனவாகக்கூடும் என்று நம்பிக்கையுடன், பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகின்றார் ராஜ்பாரதி.
அவருடன் சேர்ந்து மேலும் ஒரு நபரும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார் கோடீஸ்வரன் தெரிவித்தார்.