திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஓட்டலில் தமிழ்நாடு பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் இணையத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு இணையத்தின் தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கௌரவ தலைவர் ஏழுமலை,பொது செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் சிறப்பு அழைப்பாளர் வேலாயுதம், கோவை மாவட்ட தலைவர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மணப்பாறை சிவஞானம், திருச்சி கிருபாநந்தன பூங்கொடி இந்தநிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இக்கூட்டத்தில் இணைய பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.