திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணி துறை சார்பில் குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணி துறை மற்றும் சேவை-குழந்தைகள் உதவி மையம் (1098) குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் கீழக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் குழந்தைகள் உதவி மையத்தின் ஊழியர் கிருஷ்ணவேணி மற்றும் ஜாக்லின் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குழந்தைகள் உதவி மையத்தில் ஊழியர் கிருஷ்ணவேணி பள்ளி மாணவ மாணவிகளுக்கு குழந்தைகளின் உரிமை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார், அவர்களை அடுத்து பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ப்ரியா மாணவர்களிடம் உரையாடினார்.
இந்நிகழ்ச்சியை சிறப்பித்த சிறப்பு விருந்தினர்களுக்கும் மரக்கன்று மற்றும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளை குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைகழகம் முதுகலை முதலாம் ஆண்டு மாணவி காவ்யா ஆகியோர் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் மனிஷா பிரான்சிஸ், திவ்யஸ்ரீ, நவீன் ராஜ் மற்றும் சந்தோஷ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் 173 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.