திருச்சி கே.கே.நகர், ஓலையூரில் சக்தி நகர் ரிங் ரோடு அருகில் ஜி. எம்.ஆர்.கே. மஹால் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிங்கப்பூர் தொழிலதிபர் சு.வி.குணாளன் மகாலட்சுமி, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் சி.டி. ராமச்சந்திரன், திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜ், சிறுபான்மை பிரிவு பேட்டரி ராஜ்குமார், கவுன்சிலர் விமலா ராணி பேட்டரி ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜி.எம்.ஆர்.கே. மஹால் மேலாண்மை இயக்குனர் ஆர்.எல். குமாரராஜா-ரேகா ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த ஜி.எம்.ஆர்.கே.
மகாலில் பொதுமக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளான பிறந்தநாள் நிகழ்ச்சி, நிச்சயதார்த்த நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சி,வளைகாப்பு நிகழ்ச்சி. அலுவலக ஆலோசனை கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்கு பிரத்தியேகமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
உணவு தயாரிக்கும் இடம் மற்றும் உணவு அருந்தும் இடம் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் அதிகமான ஆதரவை வழங்க வேண்டுமென ஜி.எம்.ஆர்.கே. மஹால் சார்பில் கேட்டுக் கொள்ளபடுகிறது.