Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொதுத் தேர்வு எழுதச் செல்லும் பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தல்..

0

'- Advertisement -

 

பிளஸ்2, 10ம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு எழுதுவதற்காக செல்ல சிறப்பு பஸ்கள் இயக்க மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தல்.

 

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில், குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு பொதுத்தேர்வு மையம் அமைக்க அனுமதிப்பதில்லை.
அரசு மற்றும்
மாநகராட்சி பள்ளி படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய, ஏழ்மை நிலையில் உள்ளவர்களே
படிக்கின்றனர்.

இவர்கள் அவரவருக்குரிய தேர்வு மையங்களுக்கு செல்ல வேறு வாகனங்களை பிடித்து அல்லது நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்காக அவர்கள் பல மணி நேரம் முன்பே தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் தேர்வு நேரத்தில் பஸ் பிடித்து செல்ல மன உளைச்சல் ஆளாகி, மாணவர்கள் சோர்வடைகின்றனர்.

வேறு மையங்களுக்கு தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் நலன் கருதி –

அவர்களுக்கு அரசு பஸ் வசதி செய்து தரவேண்டும்.

தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் போது சிறப்பு பஸ்கள் இயக்குவதை போல பள்ளி தேர்வு மையங் களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக அல்லது குறைந்த கட்டணம் 7 ரூபாய் என்ற முறையில் அழைத்து செல்ல பள்ளிக்கல்வி துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்க சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.