Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தஞ்சை மாவட்டத்தில் தேர் திருவிழாவில் 11பேர் உயிரிழந்த சம்பவம், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி.உயிர் இழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்.

0

'- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது, எதிர்பாராத விதமாக, தேர் மின் கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சைகளை அளித்திடவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று விபத்து நடந்து தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்திற்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இலட்சம் ரூபாய் நிதியுதவியை அக்குடும்பத்தினருக்கு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, விபத்து ஏற்பட்ட இடத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர், விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் ஒவ்வொருவரையும் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 1 இலட்சம் ரூபாயும், லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவிகளாக வழங்கினார்.

அத்துடன் மருத்துவர்களிடம் அவர்களுக்கு
வழங்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான உயரிய சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முதன்மைச் செயலாளர்/ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.