கிராமசபைக்கு இளைஞர்களை வரவேற்கும் வகையில் வித்தியாசமான முறையில் அச்சடிக்கப்பட்ட போஸ்டரை அறிமுகப்படுத்தி பேசிய திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கூறுகையில்:-
தாய் தமிழக குடிகள் தங்கள் இல்ல விழாக்களுக்கு பத்திரிக்கை அடித்து, வெற்றிலை பாக்குடன், சுருள் வைத்து தங்களது சொந்த பந்தங்களை வரவேற்று உபசரிக்கும் உலகிலேயே விருந்தோம்பலில் தலைசிறந்தவர்கள் தமிழர்கள்.
அந்த வகையில் கிராமங்களை மீட்டெடுப்பது தொடர்பாக மகாத்மா காந்தி கண்ணெடுத்த கனவை நினைவாக்கும் விதமாக வௌவால்களும், சிலந்திகளும் கூடுகட்டி சம்பிரதாய சடங்காக தமிழகத்தில் நடந்து வந்த கிராமசபையை மீட்டெடுத்து மிகப்பெரிய சமுக புரட்சிக்கு வித்திட்ட “கிராமசபை நாயகன்” கமல்ஹாசன் நேர்மையை பின்பற்றும் அரசியல் மாணவர்களாகிய நாங்கள். வரும் 24.04.2022ந் தேதி நடக்கும் கிராமசபைக்கு தமிழக இளைஞர்களை கலந்துகொள்ள வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் அச்சடிக்கப்பட்டுள்ள வரவேற்பு போஸ்டர் இது எனக் கூறினார்.