திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே
சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா.
ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் அன்னதானம் .
திருச்சி மத்திய பஸ் நிலையம் ரெட்பாக்ஸ் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பூச்சொரிதல் விழா இன்று நடந்தது.
இதையொட்டி மத்திய பேருந்து நிலையம் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, இன்று மதியம் அன்னதானம் நடந்தது.
தொடர்ந்து மாலை 7 மணிக்கு மத்திய பஸ் நிலையத்திலிருந்து பூ எடுத்து, வாணவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க தேர் பவனியுடன் வீதி உலாவாக சென்று சமயபுரம் மாரியம்மன் கோவிலை சென்றடைகிறது.
இந்நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.