திருச்சி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியினை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்,
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திருச்சிராப்பள்ளி தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றத்தில் 75ஆவது சுதந்திர தின விழாவினையொட்டி நடைபெற்ற சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி , மற்றும் பல்துறை பணி விளக்க முகாம் கண்காட்சியினைத் திறந்து வைத்துப் பார்வையிட்டு,
ரூபாய் 2 கோடியே 70 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை
வழங்கினார்கள்.
இவ் விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு,
மாநகராட்சி மேயர்.முஅன்பழகன்,
சட்டமன்ற உறுப்பினர்கள் அ.
சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந. தியாகராஜன், இனிகோ இருதயராஜ், கதிரவன்,அப்துல் சமது, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், துணை மேயர் திவ்யா மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி கண்ணன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.