திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் 12 -14 வயது வரையிலான சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்.
திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் இளம்சிறார்களுக்கான கோர்பேவேக்ஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது ..
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு கோவிட் -19 க்கான தடுப்பூசி கோர்பேவேக்ஸ் போடப்படுகிறது.
இதற்கான சிறப்பு தடுப்பூசி முகாம் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ஞானசுசீகரன் தலைமையில் நடைபெற்றது.
தெப்பக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜெசிமாபேகம் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
முதல் கட்டமாக இன்று 600 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது..
இம்முகாமில் உதவி தலைமை ஆசிரியர் பிரபாகரன் சம்பத்குமார், என்.சி.சி அலுவலர் பிரேம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.