பணியின்போது டார்ச்சர் என புகார்:
பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
திருச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
அரியலூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் லட்சுமி பிரியா ( வயது 30). திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. பணியை பிரித்துக் கொடுப்பதில் உயரதிகாரிகளுடன் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு லட்சுமி பிரியாவுக்கு சோதனைச் சாவடியில் பணி போட்டுள்ளனர். அப்போது அதிகாரியுடன் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து லட்சுமி பிரியா குடித்துள்ளார். இதனால் சோதனைச்சாவடியில் மயங்கி விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் .
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இன்று அதிகாலையில் நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவருக்கு பணியின்போது டார்ச்சரா? அல்லது செக்ஸ் டார்ச்சரா?அல்லது எதனால் தற்கொலைக்கு முயன்றார் ?என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே அரியலூர் பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற நிலையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.