திருச்சி அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட வடநாட்டு வாலிபர் விபத்தில் பலி.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த எப்.கீழையூர் அருகே குளித்தலையில் இருந்து சிவகங்கை வரை செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாய் அமைக்கும் பணியின் போது குழியில் வேலை பார்த்து கொண்டிருந்த உத்தரபிரதேசம் மாநிலம்.தேஜ் வள்ளியா பகுதியை சேர்ந்த கௌதம் (வயது 30) ஹிட்டாச்சி இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலி.
இந்த சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.