திருச்சி கான்வென்ட் ரோடு கருப்பண்ண சுவாமி, முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது.
திருச்சி கண்டோன்மெண்ட் கான்வென்ட் ரோட்டில் ஸ்ரீராஜகணபதி, மாசி சப்பாணி கருப்பண்ண சுவாமி, அன்னை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் 45-ம் ஆண்டு திருவிழா, தேரோட்டம் மற்றும் குட்டி குடித்தல் திருவிழா கடந்த 8-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று இரவு பூச்சொரிதல் ஊர்வலம் நடந்தது. கடந்த 15-ந் தேதி இரண்டாம் மஞ்சள் காப்பு நிகழ்ச்சி நடந்தது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
நாளை (22ந் தேதி) கோவில் திருத்தேரோட்டம் நடக்கிறது. இரவு 12.05 மணிக்கு தேரோட்டம் தொடங்கி ,பாரதிதாசன் சாலை,பிராமினேட் ரோடு,மதுரை ரோடு, மேலப்புதூர், கான்வென்ட் ரோடு வழியாக கோவிலை வந்தடைகிறது. நாளை மறுநாள் (23-ந் தேதி) மாவிளக்கு பூஜையும், கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
24 – ந் தேதி காலை 10 மணிக்கு ஒத்தக்கடை மந்தையில் குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 25-ந்தேதி மதியம் 12.05 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 26 -ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா மற்றும் காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் பூ விடும் விழா, விடையாற்றி பூஜை நடக்கிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் மருளாளி ஜெயராஜ் அடிகளார் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.