தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழா.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர், ஜெயலலிதா அம்மா அவர்களின் பிறந்த நாளான (24.2.2022 வியாழக்கிழமை) அன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, கிளை, வார்டு அளவில்
கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும்
ஜெயலலிதாவின் திருவுருவ சிலைகளுக்கும், அவரது திருவுருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற அளவுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.