பொது சேவை மூலம் முந்துகிறார் பாஜக வேட்பாளர் முருகானந்தம் : 54வது வார்டு மக்கள் உற்சாக வரவேற்பு.
திருச்சி மாநகராட்சி தேர்தலில் கலெக்டர் ஆபீஸ் ரோடு, பெரியமிளகுபாறை, சின்ன மிளகுபாறை உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய54வது வார்டு பா.ஜ.க வேட்பாளராக முருகானந்தம் போட்டியிடுகிறார்.
தேர்தல் களத்தில் அவரின் வேகம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இவருக்கு அப்பகுதி வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ‘
இவர் பலதரப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகைகளில் எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் பல உதவிகள் புரிந்துள்ளார்.
மேலும் கொரோனா ஊரடங்கு காலங்களில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு அரிசி, பருப்பு மளிகை பொருட்கள் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்பகுதியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச கணினி வகுப்புகள் நடத்தி வருகிறார்.
ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வருகிறார்.
ஒரு சிலருக்கு சொந்த தொழில் தொடங்க உதவி புரிந்துள்ளார். இதன் மூலம் இவருக்கு பல்வேறு அமைப்புகள் மூலம் சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல சேவைகள் செய்த பாஜக வேட்பாளர் முருகானந்தம் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் ஆராத்தி எடுத்து அன்புடன் வரவேற்பு அளிக்கின்றனர்.
வரவேற்பு குறித்து வேட்பாளர் முருகானந்தம் கூறும் பொழுது, இந்தப் பகுதி மக்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் எந்தப் பிரதிபலனும் பாராமல் பல்வேறு உதவிகளை செய்துள்ளேன். எனவே இந்தப் பகுதி மக்களின் முழு ஆதரவுடன் கண்டிப்பாக வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினராக என் பகுதி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற்றுத்தர முழுமையாக பாடுபடுவேன் என உறுதி கூறுகிறேன்.
தோல்வி அடைந்தாலும் எனது உதவும் மனப்பான்மை மாறாது எனக் கூறினார் முருகானந்தம்..
தோல்வி அடைந்தாலும் எங்களுக்கு உதவுவேன் எனக் கூறும் மனப்பான்மை உடைய முருகானந்தத்தை வெற்றி பெறச் செய்வோம் என அப்பகுதி பொதுமக்கள் கூறி வருகின்றனர்.