Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 73 வது குடியரசு தின விழா.

0

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில் 73 வது குடியரசு தின விழாவில் உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் டி.தியாகராஜன், தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் தனலெட்சுமி கொடி ஏற்றினார்கள்.

விழாவில் மக்கள் சக்தி இயக்கம்
செந்தண்ணீர்புரம் கிளை சார்பில் அனைவருக்கும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது , மேலும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நடந்த
திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு
ஊக்கத்தொகையுடன், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய தன்னம்பிக்கை புத்தங்கள்,மற்றும் பூமியை காக்க , துணிப்பை தூக்குவோம் என்ற வகையில் துணிப்பை வழங்கப்பட்டது.

விழாவில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணைத் தலைவர் வெ.ரா.சந்திரசேகர், திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ , நிர்வாகிகள் ஆர்.கே.ராஜா, விஜயகுமார், சதீஷ், ராஜா ஆசிரியர்கள், மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்

1ஆம், 2ஆம், 3ஆம்
4ஆம, 5 ஆம் வகுப்பு
மாணவ மாணவியர்களுக்கு
07/01/2022 7ஆம் தேதி அன்று நடத்திய திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில்
முதல் மூன்று இடங்களை வென்றவர்கள்.

1) முதல் பரிசு
கீர்த்தி வாசன்
4ஆம் வகுப்பு

2) இரண்டாம் பரிசு ஹன்சிகா.
3ஆம் வகுப்பு

3) மூன்றாம் பரிசு
பிரியங்கா
முதலாம் வகுப்பு.

6ஆம்,, 7ஆம், 8ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்காக நடத்திய திருவள்ளுவர் தின திருக்குறள் சிந்தனைப் போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்றவர்கள்.

1) முதல் பரிசு
பி. சிவதர்சன
6ஆம் வகுப்பு “அ” பிரிவு

2) இரண்டாம் பரிசு
மு. ஓமேசுவர்
7ஆம் வகுப்பு “அ” பிரிவு

(3)மூன்றாம் பரிசு
அ.பிரதி ஜோஷ்வா
7ஆம் வகுப்பு “அ”பிரிவு

9ஆம்10ஆம்வகுப்பு மாணவ மாணவியர் களுக்கு நடத்தப்பட்ட திருவள்ளுவர் தின
கட்டுரைப் போட்டியில்
முதல் மூன்று இடங்களை வென்றவர்கள்.

முதல் பரிசு
சு.செபச்டின்
9ஆம் வகுப்பு “ஆ”பிரிவு

2)இரண்டாம் பரிசு
மரியபாஸ்டினா
9ஆம் வகுப்பு ” அ”பிரிவு

3) மூன்றாம் பரிசு
ம. ஸ்ரீவர்த்தினி
9ஆம்வகுப்பு”அ”பிரிவு.

ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும்
ஒத்துழைப்பு நல்கிய உயர்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர் தியாகராஜன் அவர்களுக்கும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி அவர்களுக்கும் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.