மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் சார்பில் நடைபெற வேண்டிய மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதில் மாவட்ட கே.சி.பரமசிவம், துணைச்செயலாளர் வனிதா, பொருளாளர் மனோகரன், எம்.ஜி.ஆர்.மன்றம் ராஜ்குமார், பேரவை பத்மநாதன், எம்.ஜி.ஆர்.இளைஞரணி சிந்தை முத்துக்குமார், வர்த்தக அணி ஜோசப்ஜெரால்டு, தொழிற்சங்கம் ராஜேந்திரன், ஓட்டுனர் அணி கருமண்டபம் நடராஜன், கலைப்பிரிவு கலைப்பிரிவு விஜய், தென்னூர் அப்பாஸ், இலியாஸ், பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா அன்பழகன், ஏர்போர்ட் விஜி, கலைவாணன், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு ,மல்லிகா செல்வராஜ், ஜெயஸ்ரீ, என்.டி.மலையப்பன். மகாலட்சுமிமலையப்பன், மாணவரணி புத்தூர் சதீஸ்குமார், காசிப்பாளையம் சுரேஷ், என்ஜினியர் ரமேஷ், சொக்கலிங்கம், பாலாஜி,
காஜாபேட்டை சரவணன், முருகன், கே.கே.நகர் சரவணன்,வசந்தம் செல்வமணி, எம்ஜிஆர் மன்றம் அப்பாக்குட்டி, வண்ணாரப்பேட்டை ராஜன், ராஜசேகர், கண்ணியப்பன், கதிர்வேல், குமார், மற்றும் நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாணவரணி சார்பில் மட்டும் நடைபெறும்,மாலையில் சறுக்குப்பாறையில் மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் இதுவும் இந்த வருடம் கொரோனா பாதுகாப்பு காரணமாக நடைபெறவில்லை.மாணவர் அணியின் செயல்பாடு இந்த இரு நிகழ்ச்சி மட்டும்தான்.
ஆனால் இந்த வருடம் மாணவரணி சார்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி முற்றிலும் மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெறுகிறது என மாணவரணி மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயனின் தம்பியும் வரும் உள்ளாட்சித் தேர்தலில் 14 வது வார்டில் போட்டியிட உள்ள அரவிந்த் கூறினார்.
இந்த ஒரு நிகழ்ச்சியை கூட நடத்த முடியாத மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் ஆவின் கார்த்திகேயனின் தம்பி அரவிந்த் மக்களுக்கு சேவை செய்யும் உள்ளாட்சித் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவார் என தெரியவில்லை.