403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது.
இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன.
தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. பல்வேறு கட்சிகளும் தங்கள் நட்சத்திர பேச்சாளர்கள் மூலம் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனை பபிதா பாஹத். இவர் உத்தரபிரதேச தேர்தலில் பாஜக நட்சத்திர பேச்சாளராக உள்ளார்.
இந்நிலையில், பபிதா பாஹத் பரூட் தொகுதி பாஜக வேட்பாளர் கிஷ்ணபால் மாலிக்கை ஆதரித்து நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பபிதா பாஹத் தேர்தல் ஆணையத்தின் விதிகளையும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து பபிதா பாஹத் உள்பட பாஜகவினர் 63 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.