திருச்சியில் நாளை எம்ஜிஆர் சிலை அமைக்க கால்கோள் விழா , மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி.ப.குமார் அறிக்கை.
திருச்சியில் எம்ஜிஆர் சிலை கால்கோள் விழா மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை:
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில், அதிமுக நிறுவனர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவ சிலை அமைக்க கால்கோள் விழா.
திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளின் காரணமாக பிஎச்இஎல் நுழைவுவாயில் எதிரே,
அண்ணா தொழிற்சாங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உள்ள அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவ சிலை மற்றும் பீடம் இடமாற்றம் செய்யப்பட்டு,
பி.எச்.இ.எல் நுழைவு வாயிலின் அருகில் சிலை மற்றும் பீடம் அமைக்க கால்கோள் விழாவானது நாளை 25.01.2022 காலை 10.00 மணியளவில்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
பின்னர் 11:30 மணி அளவில் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் மாவட்ட செயலாளர் தலைமையில் மொழிப்போர் தியாகிகளின் இது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
அதுசமயம் இந்நிகழ்வுகளில் அதிமுக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் கொரோனா கட்டுப்பாட்டுடன் திரளாக பங்கேற்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அஇஅதிமுக மாவட்டச் செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.