வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.
இதன் முதலாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றுள்ள நிலையில், இரு அணிகளுக்குமான இரண்டாவது டி20 போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராயும், டாம் பண்டனும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் வெளியேறினர்.
இங்கிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் தடுமாடியது. 15.1 ஓவரில் 98நீங்கள் எடுத்து 8 விக்கெட்டுகளையும் இழந்தது,இதனால் விரைவில் ஆல் அவுட் ஆகும் நிலையில் இருந்த அணியை பின்வரிசை பேட்ஸ்மேன்களின் அசாதாரண பேட்டிங் திறமையால் கவுரவமான நிலையை எட்ட உதவினர்.
குறிப்பாக, பத்தாவது வீரராக களமிறங்கிய அகேல் ஹுசேன் இங்கிலாந்துக்கு தோல்வி பயத்தை காட்டினார். அவர் 16 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 44 ரன்களை விளாசினார். கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அவர் 3 சிக்சருடன் 28 ரன்களை திரட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
இதனால், ஒரு ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக மொயின் அலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.