திருச்சியில் சிலம்ப கோர்வை கழகத்தின் சார்பில் குழந்தைகளின் உதவும் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல்.
தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திருச்சி சுப்ரமணியபுரத்தில் தமிழ்நாடு சிலம்பக் கோர்வைக் கழகத்தின் சிலம்ப மாணவர்கள் சமத்துவ பொங்கல் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உறுதிமொழியுடன் கொண்டாட்டம்.
தமிழர்களின் பொங்கல் விழா தமிழ்நாடு சிலப்பக் கோர்வைக் கழகத்தினர் இன்று திருச்சி சுப்ரமணியபுரத்தில் சிலம்ப மாணவர்களுடன் பொங்கல் வைத்து கோலாகலமாக கொண்டாடினார்கள்
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக டால்மியா என்.கே.நடராஜன், சிலம்பக் கோர்வை கழக துணை தலைவர் என்.கே.ரவிச்சந்திரன் பொருளாளர் ஆர்.கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பொங்கல் விழாவில் 50க்கும் மேற்பட்ட சிலம்ப குழந்தைகள் பொங்கல் மற்றும் கரும்பு சுவைத்து பொங்கலை திருநாளை சிலம்பம் சுற்றி கொண்டாடினார்கள்
வந்திருந்த குழந்தைகள் அனைவருக்கும் உதவி செய்யும் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக இந்திய சிலம்பக் கோர்வை கழகத்தின் தலைவர் ஆர். மோகன் அனைத்து சிலம்ப வீரர்-வீராங்கனைகள் இருக்கும் ஒரு போர்வை கொடுத்து இந்த கடும் குளிரில் போர்வை இன்றி தவிக்கும் சாலையோர ஏழை எளிய மக்களை கண்டறிந்து கொடுக்க வேண்டும் என் அனைத்து குழந்தைகளிடமும் கேட்டுக் கொண்டு ஒரு போர்வை கொடுத்து இந்த பொங்கலை கொண்டாடினார்கள்
இந்த பொங்கல் விழாவில் ஏராளமான குழந்தைகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.
குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மையை வளர்க்கும் விதத்தில் கொண்டாடப்பட்ட இந்த விழாவினை ஏற்பாடு செய்த சிலம்ப கோர்வை கழக தலைவர் மோகனை அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாராட்டி சென்றனர்.