லாக்டவுனில் அவதிக்குள்ளாகும் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.மநீம வழக்கறிஞர் கிஷோர்குமார் வேண்டுகோள்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இரவு நேர லாக்டவுனில் பணிமுடித்து வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைக்கு தொழிலாளர் நலத்துறை தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
தமிழக அரசு திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 10-மணி முதல் அதிகாலை 5-மணி வரை இரவு நேர லாக்டவுனை அறிவித்து தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.
இந்த லாக்டவுனால் திருச்சி மாவட்டத்திலிருந்து லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட சுற்று வட்டார தொலை தூர கிராமத்திலிருந்து இரண்டு பேருந்துகள் பயணித்து_ நகர்புறத்தில் தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு காலை நேரத்தில் பணிக்கு வரும் தமிழக இளம்பெண்கள் மிக குறிப்பாக இளைஞர்கள் இரவு நேரத்தில் தாமதமாக பணிமுடித்து வீடு திரும்ப மூச்சிரைக்க ஓடிவந்து பேருந்தை பிடிப்பது, பேருந்து நிலையங்களில் பேருந்திற்காக திண்டாடுவதும், மூன்று நபர்கள் என இரு சக்கரவாகனத்தில் ஆபத்தான முறையில் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் பயணம் செய்வதை பார்க்கும் பொழுது நமக்கு உள்ளபடியே மனவேதனை ஏற்படுகிறது.
மேலும் தற்பொழுது பண்டிகை காலம் என்பதால் திருச்சியில் உள்ள சிறு மற்றும் பெரும் ஜவுளிகடைகள், பாத்திரகடைகள் மற்றும் மளிகை கடைகள், ஹோட்டல்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் பணிசெய்யும் தொழிலாளர்கள், தங்களது வழக்கமான பணியை காட்டிலும், கூடுதலாக வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்த பாவப்பட்ட தொழிலாளிக்கு ஏற்படுகிறது.
இதனால் தினம்தோறும் இரவு 9.30 மற்றும் 9.45 மணியையும் தாண்டி வேலை செய்யும் மேற்படி தனியார் நிறுவன தொழிலாளர்கள். தனது கிராமத்திற்கு கடைசி பேருந்தை பிடிக்க கடையிலிருந்து “உசேன் போல்ட்” வேகத்தில் ஓடினால் மட்டுமே பஸ்சின் படிகட்டிலாவது பயணம் செய்து நள்ளிரவிலாவது வீடு திரும்ப முடிகிறது என வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே மரியாதைக்குறிய தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர், துறை செயலாளர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் திருச்சி மாவட்டம் முழுவதும் இயங்கும் சிறு மற்றும் பெரிய துணிகடைகள், பாத்திரகடைகள், மளிகை கடைகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஹோட்டல்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் தொலை தூரத்திலிருந்து வேலைக்கு வரும் தொழிலாளர்கள் இந்த இரவு நேரலாக்டவுன் காலத்தில் குறித்த நேரத்தில் பணிமுடித்து வீடு திரும்பவதை நேரில் ஆய்வு செய்து உறுதி செய்து, தொழிலாளர் தோழர்களின் இன்னல்களை தீர்க்க மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தென் மேற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
என திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல்.எஸ்.ஆர்.
கிஷோர்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.