திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கோடிகள் செலவழித்து இடிப்பதற்கு பதிலாக புதுப்பிக்கலாமே சார்…?
திருச்சி திருவானைக்காவலையும் நம்பர் ஒன் டோல்கேட்டை இணைக்கும் பழமையான கொள்ளிடம் மேம்பாலத்தை 3-கோடியே 10-இலட்ச ரூபாய் செலவில் இடிப்பதற்கு நெஞ்சாலைதுறை முடிவெடுத்துள்ளது உள்ளபடியே அதிர்ச்சியளிக்கிறது.
மேலும் நூற்றாண்டு பழமையான திருச்சி கொள்ளிடம் மேம்பாலத்தின் 18-வது மற்றும் 19-வது தூண்கள் உடைந்த காரணத்தினால் கடந்த 2018 ஆகஸ்ட் முதல் கொள்ளிடம் பழைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் மேற்படி பாலம் இடிந்து விழுவதற்கு சில காலம் முன்பாக அப்பகுதி பொதுமக்கள் அந்த பாலத்தை நடைபயிற்சி உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தி வந்தது குறிப்பிடதக்கது.
மேலும் கடந்த நான்காண்டு காலமாக மேற்படி பாலம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நெடுஞ்சாலைதுறை.
தற்பொழுது மேற்படி பாலத்தை இடிப்பதற்கான சொல்லப்படும் காரணமும் ஏற்றுகொள்ளும் படியாக இல்லை.
மேலும் மேற்படி பழமையான பாலத்தை அப்படியேவிட்டால் ஒவ்வொரு தூணாக விழுந்து புதிய பாலம் சேதமடைய வாய்ப்புள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படியே
இந்த பழைய பாலத்தை இடிப்பதற்கு ஆக கூடிய செலவை சற்று கூடுதலாக மராமத்து பணிசெய்து பராமரிப்பதோடு,
அப்பகுதி பொதுமக்களின் உடல் ஆரோக்கியதிற்கு ஏற்ப நடைபயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிக்கு ஏற்ற போக்குவரத்து இல்லா சாலையாக மாற்றினால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்பெறுவர்.
எனவே திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களும், நெஞ்சாலைத்துறை நிர்வாகம் ஒரு மாற்று ஏற்பாடாக பழமையான திருச்சி கொள்ளிடம் மேம்பாலத்தை 3-கோடியே 10-இலட்ச ரூபாயில் செலவு செய்து இடிப்பதற்கு பதிலாக பாலத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாற்று திட்டத்தை நடைமுறைபடுத்த மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
#எதையுமே
இடிப்பது எளிது,
ஆனால் உருவாக்குவது…..?
என திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர்.
கிஷோர்குமார் அறிக்கையில் கூறியுள்ளார்.