விடுதிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் காப்பாளர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நிறுவனத்தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வது,
விடுதிகளில் காப்பாளர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், கல்லூரி விடுதிகளுக்கு முதுகலை பட்டதாரி காப்பாளர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்க வேண்டும் என்றும்
விடுதிகளின் தரத்தை மேம்படுத்த முயற்சி எடுக்க வேண்டும் என்றும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் மணிமொழி, மாநில பொருளாளர் நாராயணசாமி, மாநில அமைப்பு செயலாளர் செல்வக்குமார், வேல்முருகன், வெற்றிவேல் பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.