பத்திரிகையாளர் சங்க மாநாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரை கௌரவித்த டாக்டர் தமிழரசி சுப்பையா பாண்டியன்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் பத்திரிகையாளர் சங்க மாநாடு நடைபெற்றது.
இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த மாநாட்டில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன், டாக்டர் தமிழரசி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சிவசங்கருக்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இந்த விழாவில் பத்திரிகையாளர் சங்க தலைவர் சுபாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் அமைச்சர் சிவசங்கருக்கு, டாக்டர் தமிழரசி சுப்பையா “மருத்துவர்களின் போர்வாள்’ புத்தகத்தை வழங்கினார்.
விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் வசீகரன், நீதியின் குரல் ஆசிரியர் சி.ஆர்.பாஸ்கரன், அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, ஜெயங்கொண்டம் மெல்லிய கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில, மாவட்ட நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் இருந்து வந்து கலந்து கொண்டனர்.