திருச்சியில் பேரக்குழந்தையின் தொட்டிலில் விளையாடியவர் கழுத்து இறுகி உயிரிழந்தார்.
திருச்சி, அரியமங்கலம் மலையப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கன் (வயது 40).
இவரது குடும்பத்தினர் நேற்று வெளியே சென்று விட்டதை அடுத்து, வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது தனது பேரக்குழந்தையின் தொட்டிலில் தலையை மட்டும் வைத்து ஆடியபடி இருந்துள்ளார்.
இதில் எதிர்பாராத விதமாக கழுத்து இறுகியுள்ளது.
இதனால் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
வெளியே சென்று மாலை வீடு திரும்பிய குடும்பத்தினர், தொட்டிலில் கழுத்து இறுகிய நிலையில் லிங்கன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில், அவர் மதுபோதையில், தொட்டிலில் தலையை வைத்து விளையாடியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.