திருச்சி மாநகரில்
கஞ்சா ,லாட்டரி, புகையிலை
விற்ற 7 பேரிடம்
கிலோ கணக்கில் பறிமுதல் .
திருச்சி மாநகரில்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் லாட்டரி, கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் காந்தி மார்க்கெட், அரியமங்கலம், பாலக்கரை , திருவரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் .
இந்த சோதனையில் காந்தி மார்க்கெட் பெரிய கம்மாள தெரு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக ரமேஷ்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் அரியமங்கலம் போலீஸ் சரகம் அம்பிகாபுரம் பகுதியில் கஞ்சா விற்றதாக அப்துல் கரீம் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருவரங்கம் பகுதி கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் கஞ்சா விற்றதாக அய்யனார் , ஜெயசூர்யா ஆகிய இரண்டு வாலிபர்களையும், காந்தி மார்க்கெட் கல்பாளையம் பகுதியில் கஞ்சா விற்றதாக மேகநாதன் என்பவரையும், பாலக்கரை பீமநகா கூனி பஜார் பொதுக்கழிப்பிடம் அருகில் கஞ்சா விற்றதாக ஜான் பாஷா என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சுமார் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திருவானைக்காவல் பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றதாக கமலா சேதுராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் வைத்ததற்கான துண்டு சீட்டும் ,பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கொல்லாங்குளம்பகுதியில் சீட்டாட்டம் விளையாடியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.