அரசு மாவட்ட சித்த மருத்துவமனை சார்பாக திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில்நடைபெற்ற தேசிய சித்த மருத்துவ தின விழாவில்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
‘இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை’ சார்பாக நடத்தப்பட்ட 5-வது தேசிய சித்த மருத்துவ தின விழா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் ‘அகம் 2021- உள்ளத்தனையது உடல்நலம்’ எனம் சிறப்பு மலரை வெளியிட்டார்.
பொதுமக்களுக்குத் தேவையான சித்த மருத்துவ பெட்டகங்களளையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு மாவட்ட சித்த அலுவலர் மருத்துவர் சா.காமராஜ், உதவி மருத்துவ அலுவலர் தமிழ்கனி மற்றும் சித்த மருத்துவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.