திருச்சி சாலைகளில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் குழிகள். உடனடி நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் கோரிக்கை.
திருச்சி சமூக ஆர்வலர் முனைவர் ஜான் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திருச்சியில் சமீபத்தில் பெய்த பெரும் மழையினால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் திருச்சியில் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் தெருக்கள் குண்டும் குழியுமாக உள்ளது.
குறிப்பாக கருமண்டபம் பால்பண்ணை ஸ்டாப் பகுதியில் மழைநீர் செல்லும் வகையில் தோண்டப்பட்ட இரண்டு பெரிய குழிகள் இதுவரை மூடப்படாததால் கிட்டதட்ட
இதுவரை ஒரு நாலஞ்சு பேரு இந்த குழியில் வீழ்ந்து பெரும் காயத்துடன் சென்றுள்ளனர் .

இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதே மாதிரி திருச்சி மாநகராட்சியில் இருக்கக்கூடிய பல பகுதிகளில் தார் சாலைகள் பெயர்ந்து மிகவும் மோசமாக உள்ள நிலையில் இந்த மழைநீர் செல்வதற்காக வெட்டப்பட்ட குழிகள் மூடப்படாத நிலையில் காட்டூர், பொன்மலைப்பட்டி, பொன்மலை உறையூர், ராமலிங்க நகர், பட்டாபிராமன் பிள்ளை தெரு, எடமலைபட்டி புதூர் சுப்பிரமணியபுரம் போன்ற பகுதிகளில் தெருக்கள் மற்றும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது
முக்கியமாக கருமண்டபத்தில் உள்ள பெரிய குழிகளால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு உயிர் பலி ஏற்படுத்த காத்திருக்கும் குழிகளை உடனடியாக மூடி,சாலைகளையும் உடனடியாக செப்பனிட கேட்டுக்கொள்கிறேன்
என சமூக ஆர்வலர் முனைவர் ஜான் ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளார்