சபரிமலையில் அன்னதானத்திற்கு திருச்சி மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 25 டன் உணவு பொருள்கள் அனுப்பப்பட்டது
சபரிமலை அன்னதானத்துக்கு திருச்சியிலிருந்து
சுமார் 25 டன் உணவுப் பொருட்கள் அனுப்பி வைப்பு.
சபரிமலையில் நடைபெறும் அன்னதானத்துக்காக அகிலபாரத ஐயப்பா சேவாசங்க திருச்சி மாவட்ட யூனியன் சார்பில் சுமார் 25 டன் எடையுள்ள உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில், நடைபெறும் மண்டல பூஜையை ஒட்டி கார்த்திகை 1 ஆம் தேதி முதல் 70 நாள்களுக்கு அகிலபாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் நடைபெறுவது வழக்கம்.
பம்பையிலும், சன்னிதானத்திலும், கரிமலை உச்சியிலும் என பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெறும். இந்த அன்னதானத்துக்கு அகிலபாரத ஐயப்ப சேவா சங்கம், திருச்சி மாவட்ட யூனியன் சார்பில் ஆண்டுதோறும் உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
தவிர சேவா சங்க உறுப்பினர்கள் 70 நாள்களும் அங்கு முகாமிட்டு அன்னதானப் பணிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
அந்த வகையில் நிகழாண்டு மண்டல பூஜையை ஒட்டி, நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15 ஆம் தேதி வரையில் மொத்தம் 61 நாள்களுக்கு அன்னதானம் நடைபெறவுள்ளது.
இதற்காக, திருச்சி மாவட்ட யூனியன் சார்பில் சுமார் 25 டன் எடையுள்ள அரிசி, எண்ணெய், தானியங்கள் மற்றும் காய்கனிகள் திருச்சியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் திருச்சி மாவட்டம் 21 டன், பெரம்பலூர் மாவட்டம் சார்பில் 2.50 டன், அரியலூர் சார்பில் 750 இது தொடர்பாக திருச்சி, ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில்,
அகிலபாரத ஐயப்ப சேவா சங்க திருச்சி மாவட்ட தலைவர் என். ரமேஷ் தலைமை வகித்தார். புரவலர் என்.வி. முரளி கொடியசைத்து வைத்து உணவுப்பொருள் ஏற்றிச்செல்லும் வாகனங்களை அனுப்பி வைத்தார். கௌரவ தலைவர்கள் எம்.வி. சபரிதாசன், செயலாளர் எம். ஸ்ரீதர், பொருளாளர் ஜெ. சுரேஷ், செயல் தலைவர் எஸ். ஆர். கிருஷ்ணன், அலுவலக செயலாளர் சி. ஆர். அம்சாரம், கே.ஆர்.டி. வெங்கடேஷ், கே.கே.எஸ். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.