திருக்கோயில் தனலெட்சுமியின் தாண்டவம். இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் மகேஸ்வரிவையாபுரி வேண்டுகோள்.
திருக்கோயிலில் தாண்டவம் ஆடும் தனலெட்சுமி.
கண் திறப்பாரா இணை ஆணையர் ?
நடவடிக்கை எடுக்குமா❓
இந்து சமய அறநிலைத்துறை‼️
26. 07. 2021 தேதியன்று தனலட்சுமி தாண்டவம் குறித்து வாட்ஸ்அப் பதிவு மூலம் தெரிவிக்கப்பட்டது.‼️
தொடரும் தனலட்சுமி தாண்டவம்
திருச்சி, செந்தண்ணீர்புரத்தில் அ/மி.செல்வமுத்து மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
அத்திருக்கோயில் மிகவும் மோசமான நிலையில் சிதிலமடைந்து, எந்த நேரத்தில் யார் தலையில் விழுமோ? என்ற நிலையில் உள்ளது. இது குறித்து எங்கள் இயக்கத்தின் சார்பில் கடந்த 3 வருடமாக மேற்கண்ட திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தக்கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு பல்வேறு புகார் மனுக்கள் கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் அதே பகுதியை சேர்ந்த சத்தியம்மாள் என்கிற தனலெட்சுமி மேற்கண்ட திருக்கோயிலில் கூலிக்காக உண்டியல் எண்ணுவதை பணியாக வைத்துள்ளார். இதனடிப்படையில் திருக்கோயில் பணியாளர்கள் முதல் செயல் அலுவலர் வரை பழக்கம் வைத்துள்ளார். இந்த பழக்கத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, ஊரடங்கு காலத்தில் சட்டத்திற்கு எதிராக கோயிலை திறந்து வைத்துக் கொண்டு ராஜ்ஜியம் செய்தார்.
இவரின் முன்னிலையில் தான் கோயில் திறந்து, தான்தான் முதல் தரிசனம் செய்ய வேண்டுமென அதிகாரம் செய்கிறார். இதையெல்லாம் விட கோயிலில் தெய்வங்களை பூஜை செய்யும் ஐயரை டிபன், காபி, டீ வாங்கி வர சொல்லி அராஜகம் செய்கிறார். மேலும் மூலஸ்தானத்திலுள்ள படிக்கட்டில் அமர்ந்து கொண்டு, பக்தர்களை வழிபாடு செய்ய விடாமல் முகம் சுழிக்க வைக்கிறார்.
அதே பகுதியிலுள்ள முத்துமணிடவுன் என்ற இடத்தில் ஆதிபராசக்தி என்ற திருக்கோயிலிலும் இதே போன்று தனது அதிகாரத்தால் கோவிலை இரண்டு பிரிவாக்கி, கோஷ்டி மோதலை உருவாக்கிவிட்டார். இதே போன்றே கோயிலை பிரிப்பது, பக்தர்களை வரவிடாமல் தடுப்பது, நான் தான் எல்லாமே என்று அராஜகம் செய்வது என இதே வேலையாக வைத்துள்ளார்.
இதனை அங்குள்ள பொதுமக்கள் தட்டிக் கேட்டால் அறநிலையத்துறையின் அனைத்து அதிகாரிகளும் எனக்கு பழக்கம். உங்களால் என்ன செய்ய முடியும் என்று திமிராக பதிலளிக்கிறார். இது மட்டுமின்றி இத்திருக்கோயிலுக்கான அலுவலகம் கல்லுக்குழியில் உள்ளது. அங்கு பணிபுரியும் பூபதி என்பவர் தான் இந்த தனலெட்சுமிக்கு முழுக்க பக்கபலமாக இருந்து வருகிறார். இவ்வாறு அரசு கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலை தனது சொந்த கோயிலாக நினைத்து திருக்கோயிலில் தாண்டவமாடும் தனலெட்சுமியின் அராஜகங்கள் அனைத்தும் திருக்கோயிலின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேற்கண்ட திருக்கோயிலை சரி செய்து கும்பாபிஷேகம் நடத்திட நாங்கள் எங்கள் இயக்கத்தின் சார்பில் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம்.
ஆனால் திருக்கோயிலை தனது அதிகாரத்தால் துஷ்பிரயோகம் செய்யும் தனலெட்சுமி போன்ற நபர்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாதது ஏன்? என்று தான் தெரியவில்லை.
மீண்டும் நினைவூட்டல்⁉️
கடந்த 26 .07 2021 தேதியன்று மேற்கண்ட பதிவை பதிவு செய்திருந்தோம்.
தொடர்ந்து தனலட்சுமியின் தாண்டவம் நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் திருச்சி கல்லுக்குழி பகுதியில் அருள் பாலிக்கும், ஆஞ்சநேயர் திருக்கோயில் பணிபுரிகின்ற மெய்க்காவலர், பூபதி, மற்றும் கணினி ஆப்ரேட்டர் அமிர்தம் ஆகிய திருக்கோயில் பணியாளர்கள் பெயரைக் குறிப்பிட்டு தனலட்சுமி அ/மி செல்வமுத்து மாரியம்மன் திருக்கோயிலில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அராஜக தாண்டவம் செய்துவருவது. தொடர்கதையாக தற்போது வரை உள்ளது.
திருக்கோயில் செயல் அலுவலர், பலமுறை தனலட்சுமி செயலுக்கு கண்டனம் தெரிவித்து வந்துள்ளதாக தெரிய வருகிறது. செயல் அலுவலர் திருக்கோயிலில் இல்லாத நேரத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரிகின்ற பல பணியாளர் பெயர்களை சொல்லி மிரட்டி வருகிறார் . தனலட்சுமியின் செயல் திருக்கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் தனலட்சுமியின் அராஜகப் போக்கு பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் செயல் அலுவலர் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து தனலட்சுமியின் அராஜக போக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா❓
பக்தர்களின் மன வேதனையை போக்க நடவடிக்கை எடுப்பார்களா இந்துசமய அறநிலைத்துறை⁉️
இறைபணியில்.
மகேஸ்வரிவையாபுரி
(வழக்கறிஞர்,)
நிறுவனர்/தலைவர்,
இந்து திருக்கோயில் மீட்பு இயக்கம்.திருச்சி
Cell-95002 99882