சமூக ஆர்வலர் ப. ஜான் ராஜ்குமார் அறிக்கை:
சமீபத்தில் திருச்சி மாநகர மாநகராட்சி ஆணையர் ஓர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
திருச்சி மாநகரில் சுற்றித்திரியும் மாடுகளை,ஆடுகளை பிடித்து அபராதத் தொகையாக ரூபாய் பத்தாயிரம் வரை வசூலிக்கப்படும் என்று அறிவித்தார்.
இது அறிவித்து சுமார் ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது, ஆனால் திருச்சி மாநகர் முழுவதும் உதாரணமாக எடமலைப்பட்டிபுதூர், கிராப்பட்டி, மத்திய பேருந்து நிலையம், டிவிஎஸ் டொல்கேட், கலெக்டர் ஆபிஸ் ரோடு, திருச்சி ஜங்சன் பகுதியில்,பாலக்கரை, ஒத்தக்கடை, கோர்ட், மற்றும் புத்தூர் நால்ரோடு அதுபோல் காந்தி மார்க்கெட் பகுதி காட்டூர், அரியமங்கலம் போன்ற பகுதிகளில் மாடுகள் மந்தையில் நிற்பதுபோல நின்று கொண்டிருக்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள் ஆகிறார்கள்.
பஸ்சும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். பஸ்ஸில் மக்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பஸ்சை ஓரமாய் நிறுத்துவதற்கும் வழியில்லாமல் இந்த மாடுகளால், குதிரைகள், ஆடுகள் போன்ற கால்நடைகளால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுகிறது.
எனவே மாடுகளை உரிமையாளர்கள் கட்டவிழ்த்துவிட்டு அவர்கள் வேடிக்கை பார்க்கிறார்களா ? அல்லது மாநகராட்சி ஆணையர் மாடுகளை மாநகர எல்லைக்குட்பட்ட ரோடுகளில் மேய விட்டால் உரிய தண்டனை வழங்கப்படும் என்று சொன்னது காற்றில் பறக்கவிடப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது .
எனவே இதனை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்து ஒரு உத்தரவு பிறப்பித்தால் நிச்சயமாக பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ,
காரணம் மாநகராட்சியை கால்நடை உரிமையாளர்கள் மதிப்பதே இல்லை..
எனவே காவல்துறை மூலமாக ஒரு நடவடிக்கை எடுத்தால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்
கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் மாடுகள் மந்தை போல் பத்து பதினைந்து மாடுகள் நிற்பதனால் வாகன ஓட்டிகள் பெறும் சிரமத்திற்க்கு உள்ளாகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பாக எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திர நகரைச் சேர்ந்த ஒரு வாலிபர் மாடு நடுரோட்டில் நின்றதினால் அவர் வாகனத்தை ஓட்டி வந்த போது நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகி தனது காலை உள்ளார்.
இப்படி பல சம்பவங்கள் உண்டு. ஆனால் மாநகராட்சி ஆணையரின் உத்தரவு தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது.
எனவே திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டால் இதற்கு நல்ல முடிவு வரும்.
மாட்டை வளர்ப்பவர்கள், மேய்ப்பவர்கள் அதை வயல் வெளியிலோ, அல்லது வீடுகளில் கட்டி பராமரிக்காமல் ரோட்டில் விட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து அதன் மூலமாக பல உயிர் பலி ஏற்படுத்த கூடிய நிலை உள்ளது.
எனவே இதை காவல் காவல் ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அந்தந்த பகுதியில் நடவடிக்கை எடுத்து இந்த மாடுகளை பிடித்து உரிய அபராதம் விதிக்க வேண்டும், அபராதல் செலுத்தாத கால்நடைகளை எலத்தில் விற்பதின் அரசுக்கும் லாபம், உரிய உரிமையாளர்களும் திருந்துவார்கள் என நம்புகிறேன்.
எனவே இதை உடனடியாக அமல்படுத்த மாநகர காவல் ஆணையர், அவர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்,
என சமூக ஆர்வலர் முனைவர் ஜான் ராஜ்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.