திருச்சியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை .1400 தீயணைப்பு வீரர்கள் தயார்.
திருச்சியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை .1400 தீயணைப்பு வீரர்கள் தயார்.
நிவர் புயல் மற்றம் வெள்ளத்தை எதிர்நோக்கி திருச்சி தீயணைப்பு நிலையத்தில் இருக்கக்கூடிய அனைத்து உபகரணங்கள் மற்றும் சிறப்புக் கருவிகள் அதாவது மரம் வீழ்ந்தால், வீடுகள் சாய்ந்தால் வெட்டுவதற்கு, Stone,Iron, கான்கிரீட் கட்டர்கள்,
அதே போல் தாழ்வான பகுதியில் இருக்கக்கூடிய நீர் வெளியேற்றக் கூடிய மிதவை பம்பு, நீர்மூழ்கி மோட்டார் இந்த மாதிரி உபகரணங்கள் எல்லாமே வந்து எல்லாத்தையும் ஆயத்தப்படுத்தி சரிபார்த்து அது வேண்டிய எரிபொருள் நிரப்ப செய்து அதை தயார் நிலையில் இயங்கி எல்லா பரிசோதனையும் நேற்று மாலை செய்து முடிக்கப்பட்டது .
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் திருச்சி மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார், உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், நிலைய அலுவலர் மில்கி ராஜா மற்றும் அனைத்து நிலைய பணியாளர்கள் என திருச்சி தீயணைப்பு துறை நிலையத்தில் மட்டும் 63 பணியாளர்கள் இந்த பாதுகாப்பு பணிக்கு தயாராக உள்ளனர்.
நம்ம மத்திய மண்டலத்தை பொருத்தவரைக்கும் 9 மாவட்டம்.
9 மாவட்டத்தில் 95 தீயணைப்பு நிலையம் , அந்த 95 தீயணைப்பு நிலையத்தில் இருந்து சுமார் 1400 அலுவலர் மற்றும் பணியாளர்கள் இந்த புயல் நிவாரணத்தை எதிர்கொள்ள நிவாரண பணிக்காக தயார் நிலையில் நேற்று மாலை முதல் 26 ஆம் தேதி மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து இரவு பகலாக அவர்கள் பணியில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு எந்த ஒரு விடுப்பும் எந்த ஒர் அனுமதியும் கிடையாது தொடர்ந்து பணியில் உள்ளனர் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறினர்.