சாலைப்பணி சீர்செய்ய வேண்டி அரசு மருத்துவமனை முதல் மாநகரட்சி வரை மாநகர தலைவர் ராஜேசேகரன் தலைமையில் நடந்தே சென்ற பாஜகவினர்.
திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார பிரிவு சார்பாக திருச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சாலைகளை விரைவில் சீரமைக்க வலியுறுத்தி மாநகராட்சியை கண்டித்து கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் முன்பாக பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது, இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தில் வாகனத்தை இயக்குகின்றனர்,
கடந்த சில நாட்களாக கனமழையின் காரணமாக சாலையின் மேல் மழை நீர் சூழ்ந்து சாலையில் உள்ள குண்டு குழிகள் மழைநீரில் மறைந்து விடுவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விடுகின்றனர். அவசர சிகிச்சைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கூட தடுமாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது,
மேலும் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோ அபிஷேகபுரம்
கோட்ட அலுவலகத்தை பாஜகவின் திருச்சி மாவட்ட புதிய தலைவர் ராஜசேகரன் தலைமையில் முற்றுகையில் ஈடுபட்டனர்.
அப்போது மாநகராட்சி அலுவலகத்தில் உதவி ஆணையரே அலுவலகத்திற்கு காலதாமதமாக 11 மணிக்கு மேல் வருவது தவறு, இவர் எப்படி பொது மக்களின் பிரச்சினையை சரியான முறையில் கையாளுவார் என்று பாஜகவினர் குரல் எழுப்பினர்.
பாஜகவினர் கோ அபிஷேகபுரத்தில் உள்ள அதிகாரிகள் சரியான தகவல் தெரவிக்காததால் பேசியதால் அங்கிருந்து நடைபயணமாக அனைவரும் கோசத்துடன் திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு மாநகராட்சி ஆணையரிடம் சாலையை சீரமைப்பது பற்றியும், அலுவலகத்திற்கு காலதாமதமாக வந்ததுடன், அங்குள்ள அதிகாரி பாரதிய ஜனதா கட்சியினரை ஒருமையில் பேசியது தவறு என்றும் தகவல் தெரிவித்து. இதற்கு முறைய சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கும் மாநகராட்சி ஆணையரிடம் இருந்து முறையான பதில் வராததால் பாஜகவினரின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இறுதியில் துணை கமிஷனர் முத்தரசு பாரதிய ஜனதா கட்சியினர் இடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார், அப்போது பாஜகவின் தரப்பில் மாநகராட்சியில் இருந்து உடனடியாக சாலைகளை சரி செய்ய வேண்டும் எனவும், எங்கள் கட்சியினரை ஒருமையில் பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அத்துடன் திமுக, காங்கிரஸ் சார்பாக வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள், பாரதிய ஜனதா கட்சியினர் வைத்திருக்கும் பிளக்ஸ் மட்டும் மாநகராட்சி அதிகாரிகள் கிழித்து எடுப்பதற்கு காரணம் என்ன? என்று மூன்று குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
இதற்கு முறையான சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நாங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம் என்று கூறினர்.
அதற்கு காவல்துறையினர் தரப்பில் முறையான புகார் அளித்தால், முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின்னர் உடனடியாக பாஜக தரப்பில் மூன்று புகார் மனுவை தயார் செய்து உரிய அதிகாரிகளிடம் கொடுத்த பின்னர் காலை 10 மணிக்கு கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் அருகே தொடங்கப்பட்ட போராட்டம் மதியம் 2 மணி அளவில் மாநகராட்சியில் கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் பிரச்சார பிரிவு தலைவர், மாநகர் மாவட்ட துணை தலைவர்கள் பாலமுருகன் சிட்டிபாபு, இந்திரன், பொதுச் செயலாளர் சங்கர், பார்த்திபன்,ஒண்டிமுத்து, இளைஞர் அணி தலைவர் சுதாகர் என்கின்ற வெங்கடேசன், மகளிர் அணி தலைவர் புவனேஸ்வரி, மாநில செயற்குழு உறுப்பினர் கௌதம் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என 150க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய மாநகர் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட ராஜசேகரனின் இந்த அதிரடி போராட்டத்தால் பொதுமக்களின் அடிப்படை வசதிக்காக ரோட்டில் இறங்கி போராடும் முதல் மாவட்ட தலைவர் என அனைத்து தரப்பு பொதுமக்களும் பாராட்டினர்.
இவரது பணி மேலும் சிறக்க வாழ்த்தி சென்றனர்.இதனால் நேற்று பொதுமக்களின் பார்வை திருச்சி பாரதிய ஜனதா கட்சியினர் மீது தான் இருந்தது.